மே 09 ஆர்ப்பாட்டம் – சொத்துகளுக்கு இழப்பீடு!



மே 09 ஆர்ப்பாட்டம் – சொத்துகளுக்கு இழப்பீடு!
 

கடந்த வருடம் மே மாதம் 09 ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின் போது நாடு முழுவதிலும் உள்ள பல அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்கள், மக்களால் எரித்து சேதமாக்கப்பட்டமை தொடர்பிலான இழப்பீடுகளை அரசாங்கம் வழங்க ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய அழிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான அசையா சொத்துகளுக்கான இழப்பீட்டுத் தொகை, ஆரம்ப கட்டத்தில் இருந்து வழங்க உள்ளதாக அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, அழிக்கப்பட்ட அசையா சொத்துக்களுக்காக கடந்த அரசாங்கத்தின் கிட்டத்தட்ட 15 அரசியல்வாதிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இதுவரையில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்ட 72 அரசியல்வாதிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
இந்நிலையில் அழிக்கப்பட்ட வீடுகள் மற்றும் பொருட்களின் மதிப்பை மதிப்பிடுவதற்கு அரசாங்கம் பல சிறப்பு குழுக்களை நியமித்துள்ளது.
குறித்த குழுக்கள் மூலம் உரிய அறிக்கைகள் வழங்கப்பட்டு, அதற்கேற்ப இழப்பீடு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
எனினும் அண்மைக்காலமாக சில அரசியல்வாதிகள் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களுக்கு மேலதிகமாக இழப்பீடு வழங்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், சில அரசியல்வாதிகள் தமது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக பெருமளவிலான காப்புறுதி இழப்பீடுகளை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்