கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பம்

வடக்கு ரயில் சேவை அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரையிலான பாதை நவீனமயப்படுத்தப்பட்டதன் பின்னர், சுமார் ஐந்து மாதங்களுக்குப் பின்னர் கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (13) காலை கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து அனுராதபுரம் தொடக்கம் வவுனியா வரை நவீனமயப்படுத்தப்பட்ட பாதையை அவதானிப்பதற்காக விசேட ரயில் பயணத்தை மேற்கொண்டார்.


கருத்துகள்