பெண்கள், குழந்தைகள், பாலியல் தொல்லை வீடியோக்களை பதிந்தால் 2 ஆண்டுகள் கடூழிய சிறை
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.
"பெண்களை தாக்குவது மற்றும் பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட நபர் கடுமையான குற்றத்தை செய்துள்ளார். தண்டிக்கக்கூடிய குற்றத்தை அவர் செய்துள்ளார். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது."
நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் போமிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ மேலும் தெரிவிக்கையில்,
"தண்டனைச் சட்டத்தில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.. ஒருவர் இதுபோன்ற பிரச்சாரத்தை செய்தால், 2 ஆண்டுகள் வரை கடூழிய அல்லது இல்லாமல் தண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அபராதம் விதிக்கவும் சாத்தியமும் உள்ளது ஆனால் அது விசாரணையில் நிரூபிக்கப்பட வேண்டும்."
"பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான விடயங்களை, குறிப்பாக சட்டத்தால் தடைசெய்யப்பட்ட விடயங்களைப் பகிரங்கப்படுத்துதல்."
"ஒரு நபர் சமூக ஊடக வலைத்தளங்கள் மூலம் இவற்றை சமூகமயமாக்கும் போது, அவர் நிச்சயமாக ஒரு பெரிய தவறை செய்கிறார்."
கருத்துகள்
கருத்துரையிடுக