2027-இன் பின்னர் IMF ஆதரவு தேவைப்படாது


 2027ஆம் ஆண்டின் பின்னர் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) ஆதரவு தேவைப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளை தௌிவூட்டுவதற்காக இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

சர்வதேச சமூகத்திற்கு முன், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுள்ள நாடாக இலங்கை முன்மாதிரியாக திகழ்வதாக நிதி இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு தற்போது 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.