ஒரு மணி நேரத்தில் 2,164 கோடி ரூபாவை இழந்த பிரதமரின் மனைவி!
 
இன்போஸிஸ் பங்கு கடும் வீழ்ச்சியை சந்தித்ததால் ரிஷி சுனக் மனைவி அக்‌ஷதாவின் சொத்து மதிப்பு ஒரு மணி நேரத்தில் 2,164 கோடி ரூபா அளவுக்கு குறைந்துள்ளது.
இன்போஸிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதா மூர்த்தி.
இவர் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியாவார்.
இன்போசிஸ் இணையதளத்தின்படி, ஜனவரி முதல் மார்ச் 2023 காலாண்டில், அக்க்ஷதா மூர்த்தி 3,89,57,096 அளவிலான இன்போசிஸ் பங்குகளை வைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இது நிறுவனத்தின் மொத்த மூலதனத்தில் 1.07 சதவீதமாகும்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் இன்போசிஸின் பங்குகள் கிட்டத்தட்ட 8% சரிந்தன.
இதன்மூலம் அக்க்ஷதா மூர்த்தியின் நிகர மதிப்பு சுமார் 2,164 கோடி ரூபாய் குறைந்துள்ளது என்று மனிகண்ட்ரோல் தெரிவித்துள்ளது.
அந்த சமயத்தில் பிஎஸ்இயில் பங்கு 7.89 சதவீதம் சரிந்து ரூ.5349.8 ஆக இருந்தது. இது மட்டுமின்றி, நிறுவனத்தின் சந்தை மூலதனம் (எம்கேப்)  வர்த்தகத்தில் ரூ.175,105.16 கோடி குறைந்து ரூ.22,29,151.32 கோடியாக உள்ளது.
2023 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கான இன்போசிஸ் பங்குதாரர் முறை குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.