இலங்கைக்கு இரண்டு வெண்கலப்பதக்கங்கள்
25 ஆவது ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப்: இலங்கைக்கு இரண்டு வெண்கலப்பதக்கங்கள்

 25 ஆவது ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இலங்கையின் கயந்திகா அபேரத்ன வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

தாய்லாந்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 4 நிமிடம் 14.39 விநாடிகள் எனும் நேரப் பெறுதியுடன் அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

போட்டியில் தங்கம் மற்றும் வௌ்ளிப்பதக்கங்களை ஜப்பான் சுவீகரித்தது.

இதனிடையே, 25 ஆவது ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நதீஷா லேகம்கே இலங்கை சாதனையுடன் வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

60.93 மீட்டருக்கு தனது திறமையை வௌிப்படுத்தி வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.