நாட்டில் 35,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை
நாட்டில் 35,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை; வடக்கில் 200 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன
நாட்டில் தற்போது 35,000-இற்கும் அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டது.
வடக்கு, கிழக்கில் ஆசிரியர் பற்றாக்குறை உக்கிரமடைந்துள்ளதாகவும் வட மாகாணத்தில் மாத்திரம் பல காரணிகளால் சுமார் 200 பாடசாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்தது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் சுமார் 4000 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கிழக்கில் மூதூர் கல்வி வலயத்திற்கு மாத்திரம் 1300 ஆசிரியர்கள் தேவைப்படுவதாக ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
வட மாகாணத்தில் போருக்கு பின்னர் பாடசாலைகளை ஆரம்பித்த போது 64 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் 200 பாடசாலைகள் வரையில் வட மாகாணத்தில் மூடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, வட மாகாணத்தின் சில பகுதிகளில் அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஓமந்தை இரம்பைக்குளம் நவராஜா வித்தியாலயம், நவ்வி ஶ்ரீ வாணி வித்தியாலயம், நாம்பன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகியன தற்போதும் மூடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக