அஸ்வெசும திட்டம் தொடர்பில் 5 இலட்சத்திற்கும் அதிக மேன்முறையீடுகள் - நிதி அமைச்சு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டம் தொடர்பில் இதுவரை 550000 இற்கும் அதிகமான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை விசாரணை செய்யும் நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரதேச செயலக பிரிவு மட்டத்தில் இதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 10 ஆம் திகதி வரை குறித்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக