பெறுமதியான வலம்புரி சங்குடன் 6 பேர் கைது


 ஜா - எல பகுதியில் அதிக பெறுமதியுடைய வலம்புரி சங்குடன் இரு பெண்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

14 அங்குலம் நீளமான வலம்புரி சங்கை 56 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராகவிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் பயணித்த கெப் வாகனம் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிரிந்திவெல, நிட்டம்புவ, அங்கொடை, மாளிகாகந்தை பகுதிகளைச் சேர்ந்த 06 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.