நுவரெலியாவில் 7500 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

பெரெண்டினா நிறுவனத்தின் அறிவிச்சுடர் கல்வி மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் இன்று திங்கட்கிழமை நுவரெலியா பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்கள் கல்வி கற்கும் இருபது  பாடசாலைகளில் 7500 மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கிவைக்கப்பட்டது

இந்த நிகழ்வானது பெரெண்டினா நிறுவனத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது. குறித்து நிகழ்வின் பிரதம விருந்தினராக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட மற்றும் நுவரெலியா வலயக்கல்வி  பணிப்பாளர் மற்றும் பெரெண்டினா நிறுவனத்தின் முகாமையாளர் மற்றும் சக உத்தியோகத்தர்கள் . பாடசாலைகளின் அதிபர்கள் , ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள்  என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது பெரெண்டினா நிறுவனத்தின் உறுப்பினர்கள் மாணவர்களுக்கு கற்றலின் அவசியம் தொடர்பிலும், பாடசாலை கல்வி மேம்பாடுகள், கற்றலுக்கு உதவி செய்வோருக்கும், ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் வழங்கவேண்டிய மரியாதைகள் தொடர்பிலும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவைகள் தொடர்பிலும் உரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது .

வி.தீபன்ராஜ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.