கொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..?

17-04-2016 அன்று கொழும்பு மருதானை டெம்பள் ரோட் பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகாஹ் நிகழ்வு.

விவாகப் பதிவாளர் மணமகனிடம் உங்களது மனைவிக்கு மஹராக என்ன கொடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டதும், உடனே மணமகன் எனக்கு மனைவியாக வரப்போகும் அந்த பெண் கேட்ட மஹரையும் மேலதிகமாக குறித்த தொகை பணமும் கொடுக்கிறேன் என்றார்.

இதனைச் சொன்னதும் சபையிலுள்ளவர்களுக்கு அந்த மணமகள் என்ன கேட்டிருப்பாள் என்ற ஒரு ஏக்கம்

உடனே மணமகன் அல் குர்ஆனின்சூரா பத்ஹ் 48 வது த்தியாயத்தை மனப்பாடம் செ1ய்து நீங்கள் தருவதையே எனக்கு நீங்கள் மஹராகத் தந்து என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்ற மனைவியின் வேண்டுதலை மணமகன் அந்த சபையில் உரைத்தார் அல் ஹம்துலில்லாஹ்.

முஃமின்களின் அன்னைகளான  ஆயிஷா, ஹப்ஸா, ஸைனப்,  (ரழி) உம்மு சுலைம் (ரழி) போன்ற கல்வியறிவுள்ள சிறந்த சாலிஹான ஈமானியப் பெண்களும் நம் சமூகத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
மாஷா அல்லாஹ்..!

குறித்த அந்த மணப்பெண் பாகிஸ்தானில் கல்விகற்ற ஒரு டாக்டர் பெண் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.