பாதாள உலகக் குழு தலைவரின் பிரதான உதவியாளர் கைது
துபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பாதாள உலகக் குழு தலைவரின் பிரதான உதவியாளர் கைது
துபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பாதாள உலகக் குழுவின் தலைவரின் பிரதான உதவியாளர் ஒருவர் கலால்வரி திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
40 கிராம் ஹெரோயின், வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 03 ரவைகளுடன் சந்தேகநபரை கைது செய்ததாக கலால்வரி திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிற்கான பொறுப்பதிகாரி அனுரகுமார அளுத்கே தெரிவித்தார்.
குறித்த சந்தேகநபருடன் கடந்த 26 ஆம் திகதி மேலும் இருவரை கைது செய்ததாகவும் அவர் கூறினார்.
சந்தேகநபர் நேற்று முன்தினம் (27) ஹோமாகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கருத்துரையிடுக