இலங்கை, பாகிஸ்தான் டெஸ்ட் - முதல் நாள் ஆட்டம் நிறைவு!

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 242 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (16) காலி மைதானத்தில் ஆரம்பமானது.

 நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  இலங்கை அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

அதன்படி, இலங்கை அணியின்  முதல் 4 விக்கெட்டுகள் 54 ஓட்டங்களுக்கு சரிந்தது.

பின்னர் களமிறங்கிய ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் ஐந்தாவது விக்கெட்டுக்கு 131 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.  

 ஆட்ட நேர முடிவின் போது, ஏஞ்சலோ மெத்யூஸ் 64 ஓட்டங்களை பெற்ற நிலையில், தனஞ்சய டி சில்வா 94 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.