அரச அதிகாரிகளுக்கு ஜப்பான் செல்ல வாய்ப்பு!


அரச அதிகாரிகளுக்கு ஜப்பான் செல்ல வாய்ப்பு!



இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையின் அரச துறையின் இளம் நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் பயிற்சியளிக்க சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம், இது தொடர்பான மனித வள அபிவிருத்தி புலமைப்பரிசில் திட்டத்திற்காக ஜப்பானிடமிருந்து 611 மில்லியன் ரூபா மானியமும் வழங்கப்படவுள்ளது.

கருத்துகள்