⏩ போராட்டத்துடன் அலையாக வந்த சில அரசியல் கட்சிகள் இன்று அலையுடன் அடிபட்டுப் போய் விட்டது....
⏩ மொட்டு மக்களின் கட்சி. இந்த கட்சியை யாராலும் வீழ்த்த முடியாது...
⏩ புதியவர்கள் கட்சியை விட்டு வெளியேறிய போது, மொட்டைக் காக்க பழையவர்கள் நாம் மட்டுமே எஞ்சியிருக்கின்றோம்....
- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
கடந்த போராட்டத்தின் மூலம் அலையாக வந்த சில அரசியல் கட்சிகள் இன்று அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கட்சியின் புதிய உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறிய போது மொட்டைப் பாதுகாக்க நாங்கள் மாத்திரமே எஞ்சியிருந்தோம் எனவும் கூறிய ரணதுங்க அவர்கள் மொட்டு மக்களின் கட்சி எனவும், அந்தக் கட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது எனவும் வலியுறுத்தினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொம்பே தொகுதிக் குழுக் கூட்டத்தில் அண்மையில் (23) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொம்பே உள்ளூராட்சி சபையின் பழைய அலுவலக வளாகத்தில் இந்த தொகுதிக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர் மேலும் கூறியதாவது:
“மொட்டு இலங்கை சுதந்திரக் கட்சியின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவுடனான பிளவுடன் ஆரம்பிக்கப்பட்டது. கட்சி தொடங்கும் போது, புதிய கட்சிகள் அமைத்தால், வீதிகளில் ஊர்வலம் நடத்துவோம் என, சில தலைவர்கள் கூறினர். அதைச் சொல்லி, பல சவால்களுக்கு மத்தியில் வீதிகளில் நடந்து, மக்களை திரட்டி இந்த கட்சியை உருவாக்கினோம்.
30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மகிந்த ராஜபக்ச தலைமை தாங்கினார். 2015ல் அவர் தோற்று வீட்டுக்குச் சென்றபோது பெரும்பான்மையான மக்கள் சோகத்தில் இருந்தனர். கண்களில் கண்ணீர் வந்தது. எம்முடன் இருந்த மக்களுக்கு நீதி வழங்குவதற்காகவே மஹிந்த காற்றை உருவாக்கினோம். அந்த மக்கள் மத்தியில் செல்ல எங்களுக்கு ஒரு கட்சி தேவைப்பட்டது. அதனால் ஊர் மக்களை ஒன்று திரட்டி இந்த கட்சியை உருவாக்கினோம். நாங்கள் உருவாக்கிய இந்தக் கட்சி இன்றும் பலமான கட்சியாக உள்ளது. மொட்டு மக்களின் கட்சி. இந்த கட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி போராட்டம் என்ற பெயரில் மொட்டுக் கட்சியின் எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. கடந்த மே மாதம் 9ஆம் திகதி கம்பஹாவில் அதிகளவு சேதம் ஏற்பட்டது. எனது தொகுதியில் 13 வீடுகள் எரிக்கப்பட்டன. இது திட்டமிட்ட வகையில் செய்யப்பட்ட ஒன்று. இதன் பின்னணியில் ஜே.வி.பி. இருக்கிறது. ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வர முடியாது என்பது அவர்களுக்கு தெரியும். எனவே, அவர்கள் மொட்டை உடைக்கும் பணியில் ஈடுபட்டனர். அடித்தாலும், வீடுகளுக்குத் தீ வைத்தாலும் நாங்கள் பின்னோக்கிப் போக மாட்டோம் என்பதை அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். 1977ல் எனது தந்தையின் வீடு எரிக்கப்பட்டது. இவை எமக்குப் பழகிவிட்டன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கம்பஹா முடிவுகள் கடைசியாக வந்தன. கம்பஹாவின் நிலைமை குறித்து எமது கட்சியின் தலைவர்கள் என்னிடம் வினவியபோது, எங்களிடம் 300,000 கூடுதலாக உள்ளதாக நான் கூறினேன். இறுதியாக 3 1/3 இலட்சம் வாக்குகள் பெரும்பான்மையுடன் கம்பஹாவை வென்றோம். அன்றைய தினம் எமது கட்சி ஆதரவாளர்களின் பெரும் நம்பிக்கையுடன் கோட்டாபய வெற்றி பெற்றார். பொதுத் தேர்தலின் போது எங்களுடன் இருந்தவர்களிடம் வாக்களிக்கச் சொன்னேன். பழையவர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். புதியர்கள் நம்மை விட்டு பிரிந்து சென்றார்கள். இறுதியில் என்ன நடந்தது? புதியவர்கள் கட்சியை விட்டு வெளியேறியதும், மொட்டைக் காக்க நாங்கள் மாத்திரமே எஞ்சியிருக்கிறோம்.
இன்று சிலர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் நான் அவரை ஒரு போதும் குறை கூற மாட்டேன். என்ன? மகிந்த ராஜபக்ச நாட்டை போரிலிருந்து காப்பாற்றியது போல், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய கோவிட் தொற்று நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றினார். கோத்தபாயவின் வீட்டிற்கு மக்கள் வந்த நேரம் அடித்துத் துரத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ,Ue;jJ ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. நாங்கள் ஒருபோதும் மக்களைக் கொலை செய்த கட்சி அல்ல. மக்களைக் காப்பாற்றிய தலைவர்களைக் கொண்ட கட்சி இது.
88-89 காலப்பகுதியில் ஜே.வி.பி நாட்டிற்கு என்ன குற்றம் செய்தது? அவர்கள் உத்தரவுக்கு செவிசாய்க்கவில்லை என்றால், அவர்கள் அரச ஊழியர்களைக் கொன்றனர். காவல்துறையினரும் இராணுவத்தினரும் அவர்களது குடும்பத்திற்கு வெளியே கொல்லப்பட்டனர். கடந்த போராட்டத்திலும் அதைத்தான் செய்தார்கள். அவர்கள் செய்வது, தங்கள் கருத்துக்களை எதிர்ப்பவர்களைக் கொன்று கட்டுப்படுத்துவதுதான். ஆனால், கிராமங்களுக்குச் செல்லும்போது அந்தக் கட்சிகளுக்கு நம்மைப் போல பலம் இல்லை. கடந்த போராட்டத்தின் மூலம் அலையாக வந்த சில அரசியல் கட்சிகள் இன்று அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இன்று அதிகளவான மக்கள் எமது தொகுதிக் குழுக் கூட்டங்களுக்கு வருகின்றனர். அதாவது எங்கள் கட்சி இன்னும் பலமாக உள்ளது. அதனால்தான், எங்களை அடித்தவர்களிடம், திட்டியவர்களிடம், வீடுகளுக்கு தீ வைத்தவர்களிடம், பேர வாவியில் வீசியவர்களிடம், எங்களை அடித்ததற்கும், வீடுகளுக்கு தீ வைத்ததற்கும் நாங்கள் பழிவாங்கப் போவதில்லை. ஆனால், இனிமேல் அவர்கள் எங்களை தொந்தரவு செய்தால் வட்டியுடன் சேர்த்து முதலையும் தர வேண்டும் என்று கூறுகிறேன். சமீபத்தில் நான் பாராளுமன்றத்தில் கூறினேன், முடிந்தால் இப்போது என் வீட்டிற்கு வாருங்கள், நான் தனியாக இருக்கிறேன். இது ஒரு அச்சுறுத்தலா? எச்சரிக்கையா? என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். அப்போது நான் சொன்னேன், வேண்டுமானால் மிரட்டலாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளலாம். நாங்கள் அப்பாவிகள். ஆனால் எங்களுடன் கடுமையாக இருந்தால், நாம் கடுமையாக இருப்போம்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியேறியதும் எதிர்க்கட்சியை ஆட்சியை பொறுப்பேற்க வருமாறு அழைப்பு விடுத்தோம். ஆனால் யாரும் முன்வரவில்லை. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மட்டும் வந்தார். எனவே நாங்கள் அவருக்கு எங்கள் ஆதரவை வழங்கினோம். அந்த முடிவால் நான் இன்றும் மகிழ்ச்சி அடைகிறேன். 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எமது அரசாங்கத்திற்கு உள்ளது. அதற்காக நாங்கள் அர்ப்பணித்துள்ளோம். எதிர்காலத்தில், ஒவ்வொரு தேர்தலிலும் மொட்டு கொடுக்கும் தலைமை தான் இந்த நாட்டின் அதிகாரத்தை நிலைநாட்டும்." என்றும் கூறினார்.
இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மிலான் ஜயதிலக, சஹன் பிரதீப், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன உள்ளிட்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக