முதலாவது பிரகாசமான சுப்பர் மூன் ஒகஸ்ட் 1 ஆம் திகதியன்று அதாவது நாளை காட்சியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து ஒகஸ்ட் 30 ஆம் திகதி இரண்டாவது சுப்பர் மூன் காட்சியளிக்கும்.
ஒகஸ்ட் 1 ஆம் திகதி சந்திரன் பூமியிலிருந்து 222,158 மைல்கள் (357,530 கிலோமீற்றர்) தொலைவில் இருக்கும்.
இது ஒகஸ்ட் மாதத்தின் முதல் சுப்பர் மூன் மற்றும் இந்த ஆண்டின் நான்கு சுப்பர் மூன்களில் இரண்டாவது சுப்பர் மூன் ஆகும்.
ஒகஸ்ட் 30 ஆம் திகதி சந்திரன் பூமியிலிருந்து 222,043 மைல்கள் (357,344 கிலோமீற்றர்) தொலைவில் இருக்கும்.
இது ஒகஸ்ட் மாதத்தில் இரண்டாவது சுப்பர் மூன் மற்றும் வருடத்தின் மூன்றாவது சுப்பர் மூன் ஆகும். அடுத்த சுப்பர் மூன் எதிர்வரும் செப்டெம்பர் 28-29 தென்படும்.
கருத்துகள்
கருத்துரையிடுக