பாடசாலை மாணவர்கள் இருவர் பலி

மாதம்பே, தம்பகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மாணவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் அதிவேகமாக வந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது, ​​இந்த 2 மாணவர்களும் தலைக்கவசம் அணியாமல் பாடசாலை சீருடை அணிந்து மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதுடன், மற்றைய மாணவர் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 16 வயதுடைய ருவன்வெல்ல மற்றும் சிலாபம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.