கோடிக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது


கட்டுமான நிறுவனம் நடத்தி செல்வதாக கூறி பல கோடி ரூபாய்களை மோசடி பெண்ணொருவர் தொடர்பான தகவல் வௌியாகியுள்ளது.

தனியார் கட்டுமான  நிறுவனமொன்றை நடத்துவதாக கூறி பல கோடி ரூபாய்களை மோசடி செய்த 35 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அங்கொடை, ஹிம்புட்டானை, முல்லேரிய புதிய நகரம் ஆகிய இடங்களில் குறித்த பெண் அலுவலகங்களை நடத்திச் சென்று அதன் பணிப்பாளராக அவர் கடமையாற்றியதாகவும், ஊழியர்களில் வேறு எவரும் இல்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவருக்கு இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதாகக் கூறி முற்பணமாக 57 லட்சம்  ரூபாய் பெற்றுக் கொண்டு ஒரு பகுதி வேலை மாத்திரமே செய்துள்ளதாக பெண் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு நிரந்தர முகவரி இல்லை எனவும் சகோதரர் ஒருவர் ஊடாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலத்தை பதிவு செய்ததன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹொரணை, களுத்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இவ்வாறு அந்த பண் பலரை ஏமாற்றியுள்ளமை குறித்த முறைப்பாடுகளும் தற்போது   தெரியவந்துள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.