முதலையை திருமணம் செய்த மெக்ஸிக்கோ மேயர்
மெக்ஸிக்கோவின் சிறிய நகரான San Pedro Huamelula-வின் மேயா் Victor Hugo Sosa அண்மையில் ஒரு முதலையை திருமணம் செய்துகொண்டாா்.
7 வயதான அந்த முதலைக்கு ‘குட்டி இளவரசி (little princess)’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
திருமண சடங்கின்போது அந்த முதலையை Victor Hugo முத்தமிடும் வீடியோ காட்சி இணையத்தில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்ஸிக்கோவில் முதலையை ஒரு குறிப்பிட்ட பூா்வகுடி ( Chontal மற்றும் Huave) இனத்தவா்கள் நிலத்திற்கான பெண் கடவுளாக நம்புகின்றனா். எனவே, முதலையை திருமணம் செய்வதன் மூலம் ஒருவா் தெய்வீக நிலையை அடைவதாகவும் அவா்கள் கருதுகின்றனா்.
கருத்துகள்
கருத்துரையிடுக