செறிவுத்தன்மைக்கு ஏற்ப மதுபானத்திற்கு வரி!

மதுபானத்தின் செறிவுத்தன்மைக்கு ஏற்ப வரி விதிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

“அத தெரண பிக் ஃபோகஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 மதுபான போத்தலுக்கு அரச வருவாயில் வரி விதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் வகையில் ஸ்டிக்கர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, தொழிற்சாலைகள் மற்றும் கலால் திணைக்களம் மற்றும் நிதி அமைச்சு ஆகியவற்றுக்கு இடையில் தொழில்நுட்ப தகவல்களை பரிமாறிக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.