மூடி தொண்டையில் சிக்கி பெண் குழந்தை பலி!



மூடி தொண்டையில் சிக்கி பெண் குழந்தை பலி!

 அக்குரஸ்ஸ தலஹகம பிரதேசத்தில் மூடி ஒன்றுதொண்டையில் சிக்கி பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

சுமார் ஒரு வருடமும் 15 நாட்களும் வயதுடைய குழந்தை வாயில் போத்தல் ஒன்றின் மூடியை வைத்திருந்த போது அது தொண்டையில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது சகோதரர் மூடியை அகற்ற முயன்ற போதும் அது தோல்வியில் முடிந்துள்ளது.

குழந்தை சிகிச்சைக்காக கம்புருபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள்