மற்றுமொரு குர்ஆனின் பிரதி தீயிட்டு எரிப்பு
ஈராக் தூதரகத்தின் முன் புனித குர்ஆன் நகல் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாக்கும் சட்டங்களின் கீழ் குர்ஆனை எரிக்க ஸ்வீடன் சமீபத்தில் அனுமதித்ததை அடுத்து ஈரான் மற்றும் ஈராக் முழுவதும் போராட்டங்கள் தொடங்கின.
இந்நிலையில் கடந்த வியாழன் அன்று பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகம் முற்றுகையிடப்பட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்வீடனில் மற்றொரு குர்ஆன் நகல் எரிக்கப்பட்டால், அந்நாட்டுடனான தூதரக உறவை துண்டிக்க நேரிடும் என ஈராக் எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், ‘டானிஷ் பேட்ரியாட்ஸ்’ என்ற குழுவைச் சேர்ந்த இருவர், கடந்த வாரம் இதேபோன்று ஆர்ப்பாட்டம் நடத்தி, அதை முகநூலில் நேரடியாக ஒளிபரப்பினர்.
கருத்துகள்
கருத்துரையிடுக