மட்டக்களப்பு தன்னாமுனை பகுதியில் கோர விபத்தில் குழந்தையொன்று உயிரிழப்பு!
மட்டக்களப்பு தன்னாமுனை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஆரையம்பதி பாலமுனையைச் சேர்ந்த குழந்தையொன்று உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது..!
ஆரையம்பதி பாலமுனையைச் சேர்ந்த ஒரு
வயதும் இரண்டு மாதங்களேயான பாத்திமா
மைஸ்ஹறா எனும் குழந்தையே இவ்
விபத்தில் உயிரிழந்துள்ளது.
மேலும் பாலமுனையிலிருந்து
பாசிக்குடா நோக்கி முச்சக்கர
வண்டியில் சென்று கொண்டிருந்த
வேளை தன்னாமுனையில் வைத்து
முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் காயமடைந்த மூன்று
பேர் மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக
விசாரணைகளை பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்
கருத்துரையிடுக