தீப்பிடித்த படகினை தேடும் கடற்படையினர்


அக்கரைப்பற்று கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்த படகை தேடும் விசேட நடவடிக்கையை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர்.

அக்கரைப்பற்று கடற்பரப்பில் படகு ஒன்று தீப்பிடித்து எரிவதாக கடற்படையினருக்கு நேற்று (16) இரவு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, திருகோணமலை கடற்படைத் தளத்துக்குச் சொந்தமான டோரா படகினை பயன்படுத்தி கடற்படையினர் சிலர் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைக்காக சென்றனர்.

எனினும் நள்ளிரவு 1 மணிக்குப் பின்னரும் அந்த படகினை காண முடியவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் தொடர்ந்து கடற்படையினர்  தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இது தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.