முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் ரணிலுடன் சந்திப்பு

பின்வரும் விடயங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று 5ஆம் திகதி கலந்துரையாடப்பட்டுள்ளதாக கீழ் உள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. 
இவ் விடயங்களில் சிலவற்றை ஜனாதிபதி ஏற்று அதனை  நடவடிக்கைக்காக தனது செயலாளருக்கு அறிவிருத்தியதாகவும் அடுத்த வாரம் மேலும் ஒர் சந்திப்பினை சந்திப்பதற்கும் இணக்கம் தெிவித்துள்ளார்.
 அவ் அறிக்கையில் கூறப்பட்ட அம்சங்களின் சுருக்கம் தமிழில்..

1உலக முஸ்லீம் லீக் சவுதி அரேபியா ஊடாக  இலங்கைக்கு  நன்கொடையாக வழங்க ஒத்துக்கொண்ட 5 மில்லியன் அமேரிக்க டொலர் நிதியை  பெற்றுக் கொள்வதற்காக உரிய ஆவனங்களை இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்காமை, அதற்கான நடவடிக்கை எடுத்தல்.

.3.மதங்களுக்கிடையே வெறுப்பு பேச்சு தவிர்த்தல் அதனை நிறுத்திக் கொள்ளவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

4.முஸ்லிம்களது பல்வேறு விடயங்களுக்காக பாதுகாப்பு அமைச்சில் அலைந்து சான்றிதழ் பெறவேண்டிய நிர்ப்பந்தினை  இல்லாமாக்குதல் அல்லது இலகுவாக்குதல்

5.முஸ்லிம்  சிவில் சமுகம், மத ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றது. அவர்களது கல்வி, தொழில்பயிற்சி அதற்கான நிதி என பல்வேறு திட்டங்களை ஆரம்பிப்பதில் பாரிய இன்னல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது அவற்றினை இலகுவாக்குதல்.

6.முஸ்லிம்களது இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமான  ர நுால்கள், இஸ்லாமிய கிதாபுகளை இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து விமான நிலையம் ஊடாக கொண்டுவர முடியாமல் உள்ளது. அதற்காக பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெற வேண்டியுள்ளது.. அதனை சீராக்கி ஜம்மியத்துல் உலமா ஊடாக சான்றிதழ் பெற்று அதனை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்தல்.
7.முஸ்லிம் மதப் பெரியார்கள்.  இஸ்லாமியக் கல்வியலாளர்கள் உலமாக்கல் இலங்கைக்கு வருவதற்கு விசா வழங்குவதில் பாரிய  பிரச்சினைகள் எதிர்நோக்குகின்றோம். அவற்றினை நீக்குதல். அல்லது இலகுவான வழிமுறைகளைச் செய்து தருமாரு வேண்டுகோள் விடுகின்றோம்.

8 குர் ஆண் பாடசாலைகள் அரபு மத்ரசாக்கல், போன்றவற்றின் இஸ்லாமியக் கல்வியை ஒர் முன்மாதிரியாகவும்  கொண்டு வந்து அதனை சீர்செய்தல்.

9.தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பேச்சுவார்த்ததையில் அதே மாதிரியாக முஸ்லிம் சமுகத்தினர்களை அழைத்து கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகளையும்  தீர்ப்பதற்கான இறுதி முடிபு எடுத்தல்.

10. கௌரவ சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் ஏற்றுக் கொண்டது போன்று கொவிட் காலத்தில் முஸ்லிம்களது ஜனாசாக்களை சில விசேட நிபுண்த்துவர்கள் பிழையான  கருத்துக் ஏற்ப முஸ்லிம்களது உடல்களை எரித்தமை அதற்கான நீதி நியாயம் ? கிடைத்தல் வேண்டும்.

11.வலுக்கட்டாயமாக சில பள்ளிவாசல்களும் , மத்ராசக்களையும் பொலிஸார் தலையிட்டு மூடியது சம்பந்தமாக  விசாரனை செய்து அவற்றை மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.

12. சவுதி அரசாங்கத்தினால் அம்பாறை மாவட்டத்தில் நன்கொடையாக வழங்கப்பட்ட சுனாமி 500 வீடுகளை மீள பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும் அது சம்பந்தமான நீதிமன்ற தீர்ப்பை பரீசீலனை செய்தல்.

13. முஸ்லிம் மத விவகாரத்திற்காக தினைககளத்திற்காக  நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தில்  ஏனைய வக்பு, சபை, கொழும்பு காதி நீதிமன்றங்கள் என்பனவற்றை மிகுதியாக உள்ள 2 மாடிகளை மீள அமைத்தல் போன்ற விடயங்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டதாக வெளியிட்டுள்ள அறிக்கை  தெரிவித்துள்ளது.

இச் சந்திப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, முன்னாள் ஆளுனர் அசாத் சாலி, முன்னாள் அமைச்சர் பயிசர் முஸ்தபா, சிரேஸ்ட சட்டத்தரணி என். எம். சகீட், என்.எம் அமீன், சட்டத்தரனி ரீ.கே. அசுர், வை.எம்.எம். ஏ தலைவர் இஹ்சான் ஹமீட், முன்னாள் தலைவர் .மற்றும் ஹில்மி அஹமட், டொக்டர் ,சாபி, றிசா ஜெகியா, றிஸ்வி முப்தி, சாஹிர் ஹலிம்டீன், ரசீத் எம். இம்தியாஸ். சட்டத்தரனி ஹஸ்புல்லாஹ் உட்பட ஏனை முஸ்லிம் சிவில் அமைப்புக்களின்பிரநிதிகளும் கலந்து கொண்டனர். 
(அஷ்ரப் ஏ சமத்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.