கல்முனை அல் மிஸ்பாஹ்வின் பழைய மாணவர்களுக்கான மாபெரும் கிரிகெட் மற்றும் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி அங்குரார்ப்பணம்...!

கல்முனை அல் மிஸ்பாஹ்வின் பழைய மாணவர்களுக்கான மாபெரும் கிரிகெட் மற்றும் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி அங்குரார்ப்பணம்...!


கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களை பாடசாலையோடு 
ஒன்றினைக்கும் முகமாக மாபெரும் கிரிகெட் மற்றும் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த (07) கமு/கமு அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.


பாடசாலையில்  நீண்ட காலமாக கடமையாற்றி ஆசிரியர்களினதும், மாணவர்களினதும் சமுகத்தினதும் மனதில்  நீங்காத இடம்பிடித்த மறைந்த பாடசாலையின் ஆசிரியர்களான மர்ஹூம் ஏ.ஹபீப் முஹம்மட், மர்ஹூம் எம்.எஸ்.எம்.ஷர்மில் ஆகியோரின் ஞாபகார்த்தமாக பாடசாலையின் பழைய மாணவர்களுக்கான ஏ.ஹபீப் முஹம்மட் ஞாபகார்த்த கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி,எம்.எஸ்.எம்.சர்மில் ஞாபகார்த்த கிரிகெட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப அங்குரார்ப்பண நிகழ்வு அதிபர் அப்துல் ரசாக் அவர்களின் தலைமையில்,பிரதி அதிபர் ஜின்னாவின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.  

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் பிரதிமுதல்வரும்,ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும்,கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் மற்றும் கெளரவ அதிதிகளாக கல்முனை மாநகர முன்னாள் உறுப்பினரும் அகில இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் பிரதித் தலைவரும் கல்முனை சனி மவுண்ட் விளையாட்டு கழகத்தினுடைய பொதுச் செயலாளருமான அப்துல் மனாப்,விசேட அதிதியாக கல்முனை கல்வி வலய ஓய்வு பெற்ற முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் ஆலோசகர் ஐ.எல்.எம்.இப்ராஹிம் உட்பட பாடசாலை ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.

மேலும் நிகழ்வின் அங்கமாக அண்மையில் ஓய்வு பெற்ற முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் ஆலோசகர் ஐ. எல்.எம்.இப்ராஹிம் அவர்களின் சேவையினை பாராட்டி பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

பாடசாலையின் பழைய மாணவன் அறிவிப்பாளர் ஏ.எல்.நயீம் நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய துடன்,குறித்த இரு ஏ.ஹபீப் முஹம்மட் ஞாபகார்த்த கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி மற்றும் எம்.எஸ்.எம். சர்மில் ஞாபகார்த்த கிரிகெட் சுற்றுப் போட்டியில் பதினான்கு பழைய மாணவர்கள் தொகுதி அணிகள் (14 batchs) பங்குபற்றிய துடன்,போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் எதிர்வரும்(14)வெள்ளிக்கிழமை பாடசாலையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


(எம்.என்.எம்.அப்ராஸ்)

கருத்துகள்