மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் புதிய வேலைத்திட்டம்

 மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பான புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஸாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த குழுவில் மோட்டார் போக்குவரத்து பிரதி ஆணையாளர், மோட்டார் போக்குவரத்து தலைமை பரிசோதகர் மற்றும் வைத்தியரொருவர் ஆகியோர் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து அவர்களின் நிலைமையை ஆராய்ந்து, வாகனங்களை செலுத்தும் இயலுமை காணப்படுகின்றதா என்ற ஆரம்பகட்ட பரிசோதனை இந்த குழுவினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

சம்பந்தப்பட்ட நபருக்கு ஏற்பட்டுள்ள அங்கவீனம், வாகனத்தை ஓட்டுவதற்கான பாகங்களைப் பயன்படுத்துவதற்கு இடையூறாக உள்ளதா என்ற நடைமுறை சோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறான தடைகள் இல்லையென நிபுணர் குழு பரிந்துரைத்தால், சாதாரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் நடைமுறையின் கீழ் எழுத்து மற்றும் செயன்முறை பரீட்சைக்கு தோற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான புதிய சுற்றறிக்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வெளியிட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.