பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

  
பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!
 

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் இன்று (24) முதல் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இதனை அடுத்து இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மாதம் 27 ஆம் திகதி வரையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை இடம்பெறும்.
அத்துடன் மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
மேலும் எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கருத்துகள்