⏩ இனிமேல் எங்கள் கட்சிக்காரர்களை துன்புறுத்தினால் கண்டிப்பாக வட்டியுடன் மீளச் செலுத்த வேண்டி வரும்...
⏩ மக்களுக்கு சேவையாற்றும் அதேநேரம் எந்தவொரு சவாலையும் ஏற்றுக்கொள்ளத் தயார் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்தோ அல்லது தாம் சவால்களில் இருந்து தப்பி ஓடப்போவதில்லை ...
⏩ 77 எங்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 94 இல் எதிர்க்கட்சிகளின் வீடுகளுக்கு தீ வைக்க நாங்கள் அனுமதிக்கவில்லை...
⏩ வீடுகளை எரித்து, கொலை செய்து எங்களை வீழ்த்த முடியாது...
⏩ மினுவாங்கொடை மக்கள் எனது தந்தையை பாதுகாத்தது போன்று என்னையும் பாதுகாப்பார்கள் என நான் நம்புகிறேன்...
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க -
⏩ 75 வருட சாபம் என்பது ஒரு ஏமாற்றம். கடந்த 75 வருடங்களில் இந்த நாட்டை அபிவிருத்தி செய்த பெருமை ஏறக்குறைய எல்லா அரசாங்கத்திற்கும் உரித்தாகும்...
⏩ எங்களின் இந்த அரசியல் அணியை எப்போதும் அழித்து விட முடியாது...
⏩ அடுத்த ஜனாதிபதியை உருவாக்குவதும் ஆட்சியை அமைப்பதும்
எங்கள் கட்சியை உள்ளடக்கிய கூட்டணிதான்...
பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன
⏩ சவால்களுக்கு பயந்து ஒளிந்து கொண்டால் சதிகாரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்...
⏩ இன்று பாராளுமன்றத்திலும் நாட்டிலும் அரசியல் ஸ்திரப்பாடும் பொருளாதார ஸ்தீரப்பாடும் நிலைநாட்டப்பட்டுள்ளது...
⏩ தற்போதைய அரசாங்கம் எடுக்கும் முடிவுகளின் பிரதிபலன்கள் கிடைக்க இன்னும் 6 முதல் 7 மாதங்கள் செல்லும்...
⏩ குறைந்த பட்சம் 20 இலட்சம் பேருக்கு அஸ்வெசும சலுகைகள் வழங்கப்படும்...
⏩அஸ்வெசும என்பது யாருடைய சலுகைகளையும் குறைக்கும் திட்டமல்ல...
⏩ செப்டம்பர் மாதம் ஆகும் போது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மாறும்...
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க
⏩ போராட்டத்தால் வெளிவந்தது அந்த அழுத்தம்...
⏩ அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டிற்கு தீ வைத்த நபர் மினுவாங்கொடை ஜே.வி.பி கூட்டத்தில் பேச்சு...
⏩ ரட்டா மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கணக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன...
⏩ நாட்டுக்கான மாற்றீடு ஜே.வி.பி அல்ல...
⏩ அவர்கள் எதுவுமே செய்யாதவர்கள் போல 75 வருட சாபத்தைப் பற்றிப் அனுரகுமார பேசுகிறார்....
- பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே
இனிமேல் எமது கட்சியினர் துன்புறுத்தப்பட்டால் நிச்சயமாக வட்டியுடன் சேர்த்து முதலையும் சேர்த்து வழங்க வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சேவையாற்றும் அதேவேளையில் எந்தவொரு சவாலையும் ஏற்றுக்கொள்ளத் தயார் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்தோ அல்லது தாம் சவால்களில் இருந்து தப்பி ஓடப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (16) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மினுவாங்கொடை தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி, நாங்கள் மீண்டும் சவால்களுக்கு முகம்கொடுத்து, இதை எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுப்பது என்று யோசித்தோம். எனது தந்தை ரெஜி ரணதுங்கவிற்கு பக்க பலமாக இருந்த சகலரும் அந்த இடத்தில் கலந்து கொண்டார்கள். 1977ல் ரெஜி.அவர்களது வீட்டுக்கு தீ வைத்தார்கள். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டியெழுப்ப வேலை செய்தார்கள். அன்று அவர்களது முதலாவது கட்சியின் கிளைக் கூட்டத்துக்கு 13 பேர் மட்டுமே வந்தனர். அவர்களோடு இணைந்து அமைச்சர் மிகவும் பலமான வேலைத் திட்டத்தை ஆரம்பித்தார்கள். மினுவாங்கொடை அன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பான ஆசனமாக இருந்தது. ரெஜி ரணதுங்க அவர்கள் தான் அன்று மினுவாங்கொடை ஆசனத்தை வென்று அதன் மீதுதான் நாம் .இன்று அரசியல் செய்து கொண்டிருக்கிறோம்.
உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். நாங்கள் வென்றோம் மினுவாங்கொடை தொகுதியில் நாங்கள் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிறுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தோம். பின்னர், நாடு முழுவதும் இதே சித்தாந்தம் உருவாக்கப்பட்டு, ஜனாதிபதித் தேர்தலில் கம்பஹாவில் இருந்து 365,000 வாக்குகள் அதிகம் பெற்று தகோட்டாபய வெற்றி பெற்றார். அதன்பிறகு நடந்த பொதுத் தேர்தலில் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தது. கம்பஹாவில் எமக்கு பெரும் அமைப்பு சக்தி இருந்தது. அந்த வலிமையை உடைக்க போராளிகள் விரும்பினர்.
போராட்டத்தின் பின்னர் மீண்டும் மினுவாங்கொடைக்கு வந்து எரிந்த அலுவலகத்தை புனரமைத்து பணிகளை ஆரம்பித்தேன். வீடுகளை எரித்து, கொலை செய்து எங்களை வீழ்த்த முடியாது. ஒரு வெற்றிகரமான நபர் அடிமட்டத்தில் இருந்து எழுபவர் தான். நீங்கள்தான் என் பலம். அன்று என் தந்தையின் வீடு தீப்பற்றி எரிந்த போது அவரைப் பாதுகாத்தது போல் மினுவாங்கொடையில் என்னையும் காப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள்தான் என் பலம். உங்கள் முடிவுகளின் அடிப்படையில் நான் எடுத்த முடிவு தவறானதில்லை. மக்களுக்கு சேவை செய்யும் போது எந்த சவாலையும் ஏற்க தயாராக இருக்கிறேன். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் நாங்களும் சவால்களில் இருந்து தப்பி ஓட மாட்டோம்.
77 இல் எங்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 1994 இல் எதிர்க்கட்சிகளின் வீடுகளுக்கு தீ வைக்க நாங்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் இனிமேல் எங்கள் கட்சிக்காரர்களை துன்புறுத்தினால் வட்டியுடன் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று கூறுகிறேன். நாங்கள் இப்போது விளையாட்டில் இருக்கிறோம்.
ரணில் விக்கிரமசிங்கவை என்னைப் போல் திட்டியவர்கள் எவரும் இல்லை. போராட்டத்துடன் மகிந்த தலைமையிலான அரசாங்கம் வெளியேறியது. பின்னர் ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகினார். அதன் பிறகு யாரும் பொறுப்பேற்க முன்வரவில்லை. கட்சியை பிளவுபடுத்தி நாட்டை ஒன்றிணைத்து திரு.ரணில் அவர்களுக்கு ஆதரவளிக்க முன்வந்தோம். தற்போது 69 இலட்சம் பேரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளித்தமை மகிழ்ச்சியளிக்கிறது.
77 இல் எங்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 1994 இல் எதிர்க்கட்சிகளின் வீடுகளுக்கு தீ வைக்க நாங்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் இனிமேல் எங்கள் கட்சிக்காரர்களை துன்புறுத்தினால் வட்டியுடன் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று கூறுகிறேன். நாங்கள் இப்போது விளையாட்டில் இருக்கிறோம்.
ரணில் விக்கிரமசிங்கவை என்னைப் போல் திட்டியவர்கள் எவரும் இல்லை. போராட்டத்துடன் மகிந்த தலைமையிலான அரசாங்கம் வெளியேறியது. பின்னர் ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகினார். அதன் பிறகு யாரும் பொறுப்பேற்க முன்வரவில்லை. கட்சியை பிளவுபடுத்தி நாட்டை ஒன்றிணைத்து திரு.ரணில் அவர்களுக்கு ஆதரவளிக்க முன்வந்தோம். தற்போது 69 இலட்சம் பேரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளித்தமை மகிழ்ச்சியளிக்கிறது.
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. சவால்களில் இருந்து நாம் ஓடுவதில்லை. இன்று எரிவாயு வரிசைகள் இல்லை. எண்ணெய் வரிசைகள் இல்லை. மின்சாரம் உள்ளது. டொலர் வலுவடைகிறது. 69 இலட்சம் பேரின் எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது. எங்கள் கட்சியில் கொலைகாரர்கள் இல்லை. கைகளில் ரத்தம் இல்லை. ஐ.டி. தூக்கவில்லை. எங்கள் கட்சி மக்களை கொல்லாத தூய்மையான கட்சி என்றும் அவர் கூறினார்.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் தரமேஷ் பத்திரன பின்வருமாறு தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு மஹிந்த தோற்கடிக்கப்பட்ட போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மஹிந்த காற்றை அமுல்படுத்துவதற்கு பெரும் ஆற்றலை வழங்கியதாக எனக்கு ஞாபகம். ரணதுங்கவினர் கம்பஹா மினுவாங்கொடை அரசியலை அழகுபடுத்தியவர் என்ற வகையில் செயற்பட்டவர்கள். 1986 ஆம் ஆண்டு அக்மீமன இடைத்தேர்தலில் போட்டியிட்ட எனது தந்தைக்கு ரெஜி ரணதுங்க அவர்கள் ஒரு மாதம் எங்கள் வீட்டில் தங்கி எமக்கு ஆதரவு தந்தார். நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு காரணங்கள் பங்களித்தன. 2019 ஈஸ்டர் தாக்குதல் நடந்தது. 2020 இல் ஆட்சிக்கு வந்த எமது அரசாங்கமும் சில சில தவறுகளை இழைத்துள்ளது.
எங்கள் வீடுகளை எரித்த ஜே.வி.பியினர் 75 ஆண்டுகால சாபத்தை பற்றி பேசுகின்றனர். கடந்த 75 வருடங்களில் இந்த நாட்டை அபிவிருத்தி செய்த பெருமை ஏறக்குறைய எல்லா அரசாங்கத்திற்கும் உரித்தாகும். எனவே, 75 வருட சாபம் என்பது ஒரு ஏமாற்றம்.
எங்கள் கட்சி பலம் வாய்ந்த கட்சி. எங்கள் பயணம் தண்ணீருக்கு அடியில் உள்ள ஒரு இறப்பர் பந்து போன்றது. எப்படியோ மேலே வந்துவிடும். எனவே, அடுத்த ஜனாதிபதியை உருவாக்குவதும் ஆட்சியை அமைப்பதும் எங்கள் கட்சியை உள்ளடக்கிய கூட்டணிதான். எங்களின் இந்த அரசியல் ஓட்டத்தை ஒருபோதும் அழிக்க முடியாது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பின்வருமாறு உரையாற்றினார்.
சவால்களுக்கு பயந்து மறைந்தால், சதிகாரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். 6-7 மாதங்களுக்கு முன்பு, ஜனநாயகம் அழிக்கப்பட்டு, நாடு ரத்த வெள்ளமாக மாறியது. மக்களின் துன்பத்தைத் தன் மகிழ்ச்சியாக மாற்றினர். அப்படிப்பட்ட அரசியல்தான் இருந்தது. 2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் எமது அரசாங்கம் உட்பட தற்போதுள்ள அரசாங்கங்களின் கொள்கை பலவீனங்களினால் கடுமையான சவால்களை எதிர்கொண்டோம். இன்று பாராளுமன்றத்திலும் நாட்டிலும் அரசியல் ஸ்தீரப்பாடும் பொருளாதார ஸ்தீரப்பாடும் நிலைநாட்டப்பட்டுள்ளது. கோவிட் தொற்றுநோய்க்கு முன்னர், நாட்டில் பொருளாதார நெருக்கடி இருந்தது. சுற்றுலாத் துறை வீழ்ந்தது.
தற்போதைய அரசாங்கம் எடுக்கும் முடிவுகளின் பிரதிபலன்களைப் பெற இன்னும் 6 முதல் 7 மாதங்கள் போகும். இப்போது நாட்டில் எண்ணெய் இருக்கிறது. எரிவாயு உள்ளது. உரம் உள்ளது. மின்சாரம் உள்ளது. பொருட்களின் விலைகள் குறைந்து வருகின்றன. அதிகரித்தவுடன் குறையாது. ஆனால் நிவாரணம் வருகிறது. சரிந்த நிலையில் இருந்து இலங்கை இப்போது மீண்டு வருகிறது. இன்று நாட்டில் வலுவான நிதி ஒழுக்கம் உருவாகியுள்ளது. இப்போது நாங்கள் உள்ளூர் கடனை மறுசீரமைக்கும் போது ஜே.விபி மற்றும் ஐ.ம.ச பெரும் பிரச்சினைகளை உருவாக்கினர். நாட்டு மக்களும் அவர்களை நம்பினர். அரசாங்கம் என்ற வகையில் எதிர்க்கட்சிகளின் பொய்களை களைந்து சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெற முடிந்தது. இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலம், செப்டம்பர் மாதத்திற்குள் நாம் வங்குரோத்து நிலையிலிருந்து வெளியேற முடியும்.
ஜே.வி.பி.யிடம் சரியான வேலைத் திட்டம் இல்லாத காரணத்தினால் சர்வதேச நாணய நிதியத்திடம் அவர்கள் பேசப் போகவில்லை. ஆனால், சாலைகளிலும், சந்திகளிலும், நாட்டைக் கட்டியெழுப்புவது எப்படி என்று பேசுகிறார்கள். நாட்டில் நன்மைகளைப் பெறுபவர்களில் சுமார் 30% பேர் தகைமை இல்லாதவர்கள் அவற்றைப் பெறுபவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, உரியவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு அஸ்வெசும நிவாரணத் திட்டத்தை அமுல்படுத்தியது. அந்த வேலைத்திட்டத்திற்காக 206 பில்லியன் ரூபாவை ஒதுக்கினோம். அரசின் இந்த திட்டத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் முட்டுக்கட்டை போட்டன.
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற கோத்தபாய ராஜபக்ச, ஆகஸ்ட் 2020 வரை கோவிட் தொற்றுநோயை நன்கு நிர்வகித்து நாட்டை ஆட்சி செய்தார். அந்த உணர்வின் காரணமாகவே பொதுத் தேர்தலில் 2/3 அதிகாரத்தை மக்கள் எமக்கு வழங்கினர்.
கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் ஏற்படும் பிரச்சினைகளை நிர்வகிக்க இயலாமை காரணமாக, கடும்போக்குவாதிகள் N.G.O நிறுவனங்களை நாடியுள்ளனர். சண்டை முடிந்து கோத்தபாய ராஜபக்ச வீட்டுக்கு அனுப்பப்பட்டார். மக்கள் மிகுந்த அழுத்தத்தில் இருந்தார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த அழுத்தமே போராட்டத்தில் இருந்து வந்தது. ஆனால் ஜே.வி.பி யினர் போராட்டத்திற்குள் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தினர். இன்று அது தெளிவாகிறது. அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டிற்கு தீ வைத்த நபர் மினுவாங்கொடை ஜே.வி.பி கூட்டத்தில் பேசுகிறார். போராட்டத்தில் முன்னாள் பாதிரியார் ஒருவரின் கணக்கில் 12 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. கௌதமாலாவில் இருந்து பணம் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகிலேயே அதிக போதை பொருட்களை பயன்படுத்தும் நாடு கவுதமாலா. அப்படிப்பட்ட நாட்டில் இருந்துதான் கோத்தபாயவை துரத்துவதற்குப் பணம் கொடுக்கப்படுகிறது. ரட்டா மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வங்கிக் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. மேலும் தகவல்கள் தெரியவரும். நாங்கள் மக்கள் ஆணையைப் பெற்ற அரசாங்கம். ஆனால் இந்த போராட்டம் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையும் வீட்டிற்கு செல்ல நேரிட்டது. இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவே முதல் முறை.
ஜே.வி.பி நாட்டுக்கான மாற்று அல்ல. இன்று மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அனுரகுமார பேஸ்புக்கின் ஜனாதிபதி. நாட்டிற்கு பொய் சொல்வது ஏன்? உண்மையைச் சொல்ல வேண்டும். ஒரு டீக்கடை கூட நடத்தி அனுபவம் பெறாத ஜே.வி.பி எப்படி நாட்டை ஆள முடியும்? அவர்கள் எதுவும் செய்யாதது போல் 75 வருட சாபத்தைப் பற்றி அனுரகுமார பேசுகின்றார். திருமதி சந்திரிகாவின் அரசாங்கத்தில் அனுரகுமார அமைச்சரானார். 5 ஆண்டுகள் அமைச்சராக பதவி வகித்தார். ஆனால் இடையில் விட்டுவிட்டார். அவர் அமைச்சராக இருந்த விதம் பற்றி நான் பேசவில்லை. சர்வதேச சமூகத்தை கையாளும் அறிவு ஜே.வி.பி.க்கு இல்லை. ஜேவிபி ஒரு பயங்கரவாத அமைப்பு. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க அனுரகுமார திட்டங்களை வகுத்தார். அது போரின் கடைசிக் காலம். அப்போது வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்குமானால் வடக்கில் இன்னும் யுத்தம் இருந்திருக்கும். ஈஸ்டர் தாக்குதல் கொலையாளிகளின் தந்தையும் மாமாவும் ஜே.வி.பி.யின் தேசிய பட்டியலில் இருந்தனர். இவை சும்மா நடக்கும் விஷயங்கள் அல்ல.
நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவை விமர்சித்தோம். ஆனால் இந்த தருணத்தில் அவரால் மட்டுமே சவாலை ஏற்று பொருளாதாரத்தை வலுப்படுத்த முடிந்தது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாங்கள் இடைஞ்சல் ஏற்படுத்தவில்லை. அதற்கு நான் பொறுப்பு, ஜனாதிபதி கோட்டாபயவுக்கு நடந்ததை தற்போதைய ஜனாதிபதிக்கும் நடக்க அனுமதிக்க மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சியும் கருத்துத் தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக