சிங்கப்பூரில் உள்ள பிரபல சாகச மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான 'Go Bungi' ஆண்டுதோறும் 10,000 வீரர்களை இலங்கைக்கு அழைத்துவர திட்டமிட்டுள்ளதாக தாமரைக் கோபுர முகாமைத்துவத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.


உலகெங்கிலும் சுமார் 50,000 பங்கி வீரர்கள் அந்த நிறுவனத்துடன் இணைந்துள்ளதாகவும், அவர்களைத் தொடர்புகொள்வதற்கான ஒப்பந்தத்தில் 'கோ பாங்கி' நிறுவனமும் தாமரைக் கோபுர நிர்வாகமும் கையெழுத்திட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


அந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இவ்வருட இறுதியிலிருந்து ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சமரசிங்க மேலும் குறிப்பிட்டார்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.