தேசிய மக்கள் சக்திக்கு தடை உத்தரவு



கொழும்பில் பல முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை விதித்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா  உள்ளிட்டவர்களுக்கு எதிராக  நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட விளக்கமளிப்பிற்கு அமைய கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி இன்று நண்பகல் 12.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை பின்வரும் இடங்களில் போராட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலகம்
ஜனாதிபதி மாளிகை,
நிதி அமைச்சு
மத்திய வங்கி,
பொலிஸ் தலைமையகம்,
கோட்டை ரயில் நிலையத்திலிருந்து  CTO சந்திப்பு வரையான ஒல்கொட் மாவத்தை
CTO சந்திப்பிலிருந்து செராமிக் சந்தி NSA சுற்றுவட்டம் வரையான லோட்டஸ் வீதி
யோர்க் வீதி
வங்கி மாவத்தை
செதம் மாவத்தை
முதலிகே மாவத்தை
பரோன் ஜயதிலக மாவத்தை
பொலிஸ் தலைமையகம் எதிரில்
பாலதாக்ச மாவத்தை
சைத்யா வீதி
ஜனாதிபதி மாவத்தை
காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து NSA சுற்றுவட்டம் வரையான காலி வீதியுடன் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட காலிமுகத்திடல் வளாகம்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.