யுனிசெப் பிஸினஸ் கவுண்சில்
மாநாட்டில் உரையாற்றிய
சம்மாந்துறை அல் - அர்சத் மஹா வித்தியாலய 
மாணவி!!

சிறுவர் உரிமை மற்றும் நிலைபேறான அபிவிருத்தி என்பதில் பல்வேறு சர்தேச நிறுவனங்கள் பெருமளவில் முனைப்புடன் செயற்படுகின்றன. அதில் யுனிசெப் நிறுவனத்தின் செயற்றிட்டம் பெருமளவில் பரந்ததாக காணப்படுகின்றது.

இதனை அடிப்படையாகக் கொண்டு யுனிசெப் தற்போது இலங்கையில் Business Council ஒன்றை நிறுவி அதனூடாக சூழல் பாதுகாப்பு, சிறுவர் உரிமைகள் மற்றும் நிலைபேறான செயற்றிட்டம் போன்றவற்றை முன்னடுக்கவுள்ளது. 

நாட்டில் சிறுவர் உரிமை மற்றும் நிலைபேறான அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கில் யுனிசெப் அமைப்புக்கும், முன்னனி வணிகத் தலைவர்கள் மற்றும் தீர்மானம் எடுப்பவர்களுக்கு இடையில் மூலோபாயக் கூட்டாண்மையை ஏற்படுத்தி வர்த்தக சபையொன்றை யுனிசெப் ஆரம்பித்துள்ளது.

இந்த வர்த்தக சபையானது சிறுவர்களின் உரிமைகளுக்காகச் செயற்படுவதற்கும், இலங்கையில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளையோரின் நலன்களுக்காகவும் செயற்படக்கூடிய வகையில்  தனியார் துறையிலுள்ள பிரமுகர்கள் அடங்கிய குழுவை ஒன்றிணையும் தெரிவு செய்து, அதில் வணிகத் தலைவர்களை வர்த்தக சபை உறுப்பினர்களாக தமது நிறுவனங்களைப் பிரதிநிதி நிறுவியுள்ளனர்.

இதன் ஆரம்ப நிகழ்வாக 'பிஸினஸ் கவுண்ஸில்' உருவாக்கமொன்று கடந்த ஜூன் 28 ஆம் திகதி கொழும்பு Courtyard by Marriot 
 ஹோட்டலில் இடம்பெற்றது. 

இதில் குறித்த திட்டத்தில் இணைந்துள்ள சுமார் 14 முண்ணனி நிறுவனங்களின் பிரதாணிகள் அதிதிகளாக பிரசண்ணமாகியிருந்தனர். 

வர்த்தக சபையின் உறுப்பினர்களாகப் பின்வருவோர் அடங்குகின்றனர்.
திருமதி. ஷிரோமல் குரே,தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜெட்விங் ட்ரவால்ஸ் (பிரைவைட்) லிமிடட், 
திரு . ரதிக .டி. சில்வா நிறைவேற்றுப் பணிப்பாளர், ஐக்கிய நாடுகள் உலகளாவிய ஒப்பந்தம் (வலையமைப்பு இலங்கை ),
திரு. டிலான் பெர்னாந்து,பிரதம நிறைவேற்று அதிகாரி, டில்மா சிலோன் ரீ கம்பனி பிஎல்சி
கலாநிதி.ரொஹான் பெர்னாந்து - பிரதம நிறைவேற்று அதிகாரி, அட்கின் ஸ்பென்ஸ் பிஎல்சி, 
திரு. ஷனில் பெர்னாந்து - தலைவர், சர்வதேச வணிக சங்கம் (இலங்கை ), 
திரு.  ஃபிர்சான் ஹாசிம் - இலங்கைக்கான பணிப்பாளர், அனர்த்த முகாமைத்துவத்துக்கான ஆசிய பசுபிக் கூட்டணி,
திரு. ரஞ்சித் பேஜ் - பிரதித் தலைவர், கார்கிள்ஸ் (சிலோன்) பிஎல்சி
திரு.அஷோக் பத்திரகே - பிரதம நிறைவேற்று அதிகாரி, சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பிஎல்சி 
திருமதி. அயோத்யா பெரேரா - முகாமைத்துவப் பணிப்பாளர், சம்பத் வங்கி பிஎல்சி 
கலாநிதி. ரொஷான் ராஜதுரை - முகாமைத்துவப் பணிப்பாளர், ஹெய்லிஸ் பிளான்டேஷன் துறை 
திரு.கே.ஆர் .ரவீந்திர - பிரதம நிறைவேற்று அதிகாரி, பிரின்ட்கெயர் பிஎல்சி
திரு.சுபுன் வீரசிங்ஹ - குழும பிரதம நிறைவேற்று அதிகாரி, டயலொக் 
அக்ஸியாட்டா பிஎல்சி 
ஷோமாலி விக்ரமசிங்ஹ - குழும முகாமைத்துவ பணிப்பாளர்,சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடட் மற்றும் திருமதி கஸ்தூரி 
செல்வராஜா வில்சன் - குழும நிறைவேற்று அதிகாரி, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி.
ஆகிய நிறுவனங்களின் பிரதானிகளே பிரசண்ணமாகியிருந்தனர்.

மேலும், இந் நிகழ்வில் ஒரு சிறப்பம்சமாக மாநாட்டில் அதிதிகள் முன்னிலையில் ஒரேயொரு மாணவிக்கு மாத்திரம் விழிப்புணர்வு பேச்சு ஒன்றுக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருந்தது. 

அந்த மாணவி சம்மாந்துறை அல் - அர்சத் மஹா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜலீல் பாத்திமா மின்ஹா ஆவார். 

11 வயது நிரம்பிய இந்த மாணவி தனது இள வயதிலேயே கலைத்துறையில் தன்னை அடையாளப்படுத்தி வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது. 

பொதுவாக பாடசாலை மாணவர்கள் சாதாரண தரம், உயர்தரம் இப்படியான காலங்களில்தான் இணைப்பாட விதானங்களில் அதிக ஆர்வம் செலுத்துவதுண்டு. 

ஆனாலும், இந்த மாணவியானவள் தன்னுடைய 11 வயதிலேயே சர்வதேச நிறுவனமொன்றின் பெறுமதியான சபையில் தடுமாற்றம், தயக்கம் எதுவுமே இல்லாது தையரியமாகவும், தெளிவாகவும் தனது உரையை கொண்டு சென்றார். 

உண்மையில் இந்த சிறு வயதில் இப்படியான சர்தேச அளவிலான நிறுவனத்தின்; அதிலும் குறிப்பாக இலங்கையின் தொழில் வல்லுனர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் இம் மாணவி உரையாற்றியிருப்பதானது அம் மாணவியின் ஊருக்கும், பாடசாலைக்கும் பெரும் மெச்சத்தக்க விடயமாகும்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய யுனிசெப் ஸ்ரீலங்காவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் கூறியதாவது,

'வணிகத் தலைவர்கள் மற்றும் தீர்மானம் எடுப்பவர்களுக்கு உடனுழைப்புடன் கூடிய தளத்தை உருவாக்கும் நோக்கில் யுனிசெப் ஸ்ரீ லங்கா வர்த்தக சபையை ஆரம்பிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். 

அத்தோடு இந்த சபையின் ஊடாக இலங்கையிலுள்ள சிறுவர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தை ஏற்ப்படுத்துவதற்கும் நிலையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தனியார் துறையின் சக்தியைப் பயன்படுத்துவது இதன் நோக்கமாக அமைந்துள்ளது' - என்றார்.

இதே வேளை சிறப்புரையாற்றிய பாடசாலை மாணவியான ஜலீல் பாத்திமா மின்ஹாவின் உரையிலிருந்து;

'வானிலை என்றால் என்ன? என நோக்குவோம். ஒரு நாளில் 24 மணி நேரத்துக்குள் ஏற்படும் சூரிய வெப்பம், மழைப் பொழிவு, காற்றின் வேகம். காற்றின் அழுத்தம் இன்னும் பல விடயங்களில் ஏற்படும் மாற்றமேதான் வானிலை என அழைக்கப்படும். 
காலநிலை மாற்றத்துக்கான காரணிகளாக  01.வெப்ப நிலை 02. கற்று 03 , காற்றின் அழுத்தம் 04 ஈரப்பதம் 05. பசுமை இல்ல வாயு 06. மழைப் பொழிவு  போன்றவைகளையும் குறிப்பிடலாம்.      - காலநிலை மாற்றம் ஏற்படுவதால் - சமூக, சுற்றுச் சூழல் அமைப்புகளுக்கும் , மனிதர்கள் உயிர் வாழ்வதையும், இயற்கை நிலைப்பாட்டை உறுதி செய்வதிலும் மற்றும் சீரற்ற மழை வீழ்ச்சி, சமூக பொருளாதார இழப்பகளுடன் சுற்று சூழல் பாதிப்புக்களும் இடம்பெறும் . மேலும் சூரிய கதிரில் UV (ultra Valth)
கதிர் வீச்சை ஓஷோன் படலம் தனது படையால் சுத்தம் செய்து நல்ல கதிர்களை பூமிக்கு விடுகிறது. 

வளி மண்டலத்தில் வாயுக்களின் அளவுகளாக : நைட்ரைஜன்- 78%, ஒக்சிசன் - 21%,  ஆர்க்கன் - 0.9%, காபனீர் ஒட்சைட்டு - 0.03%, ஏனையவை - 0.004%. 

காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் காரணிகளில் மிகப் பிரதானமானது- வெப்பநிலை  (Temproture) - அதாவது ஒரு பொருளினுடைய சூட்டின் அளவே வெப்பநிலை எனலாம். 

வளிமண்டலத்தின் காற்று வெப்பநிலை அதிகரிப்பதனால் -உலகமே பாதிக்கப்படுகின்றது.
 
வெப்ப நிலையைத் தீர்மானிக்கும் காரணிகளாவன: அச்ச ரேகை, வளி அமுக்கம், நிலத்தின் தன்மை, சரிவுத் தன்மை , உயரம், மண்ணின் தரம், தாவரம் - காடுகள் போன்றவைகள். 
உலகின் அதிகபட்ச வெப்பநிலை - 1913.July-10 கலிபோனியாவில் மரண பள்ளத் தாக்கு (Deth vale) எனும் இடத்தில் 56.7 டிக்றி செல்சியஸ் உணரப்பட்டது. 

குறைந்தபட்ச வெப்ப நிலையானது - அந்தாட்டிக்காவில் உள்ள ஓர் பகுதியான - சோவியத் வெஸ்டென் - 1983 / July/21
ம் திகதி - மைனஸ் 89.2 டிக்றி செல்சியஸ் உணரப்பட்டது. 

காலநிலை மாற்றத்தினால் வெப்பநிலை மாற்றம் அதிகரிக்கிறது என்பதாக 2007 ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான சபை (Inter Govermental Pane| on climate Change) குறிப்பிடுகின்றது.

வலுச்சக்தி பயன்பாட்டினால் 26% வீதமும், கைத் தொழில் செயற்பாட்டினால் -19% வீதமும், போக்குவரத்து செயல்களால் -13% வீதமும், விவசாய செய்கையினால்- 14% வீதமும், காடழிப்பினால் -17% வீதமும் , ஏனையவைகளினால் - 11% வீதமும் பச்சை இல்ல வாயுக்கள் வெளியேறுகின்றது. 

உலகில் ஒரு வருடத்தில் 13.5 மில்லியன் ஹெக்டேயர்  காடுகள் அழிக்கப்படுகிறது. 

அது இலங்கையின் மொத்த பரப்பளவு 6.5 மில்லியன் ஹெக்டேயர் ஆகும். 

இலங்கையைப் போல் இரண்டு மடங்கு காடுகள் அழிக்கப்படுகின்றன.
ஒரு மாதத்துக்கு 20,000  ஹெக்டேயர் அதாவது 50,000 ஏக்கர் மரங்கள் அழிக்கப்படுகின்றன.

ஒரு செக்கனுக்கு ஓர் உதைப்பந்தாட்ட விளையாட்டு மைதானத்தின் பரப்பளவுக்கு நிகரான அளவு காடுகள் அழிக்கப்பட்ட வண்ணமே உள்ளன. 

மக்களின் சுவாசத்துக்கு அடர்ந்த காடுகள் 20% சதவீதம் காணப்படல் வேண்டும். 

ஆனால் இன்று இலங்கையில் அடர்ந்த காடுகளின் சதவீதம் மிகவும் குறைந்த அளவான 17.2% சதவீதமாகவே காணப்படுகின்றது. 

இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் காடுகளின் வீதங்களை சற்று நோக்குவோமானால் - 1900 ம் ஆண்டில் 84%,  1956 ல்-44%, 1982ல் - 32%,  2000ல் - 30% தற்போது - 29.2% வீதமாகக் காணப்படுகின்றது. 

இலங்கையின் மாவட்ட ரீதியாகக் காடுகளின் சதவீதமாக பார்க்கையில் - அம்பாறை மாவட்டம்- 37 % , திருகோணமலை மாவட்டம் -34%, மட்டக்களப்பு மாவட்டம் - 8 % , கொழும்பு மாவட்டம் மிகவும் பரிதாபம் - 0 % காணப்படுகிறது. 

பயங்கரத்துக்குள் துளைந்து விட்டோம். மனிதரிகளின் சுவாசிப்புக்கு பாதிப்பு நெருங்கிக் கொண்டிருக்கிறது. 

மனிதர்கள் அழிவுக்குள் சென்று கொன்டிருக்கிறார்கள். 

நான் இச்சபையினோர் முன்னிலையில் ஓர் வேண்டுகோளை சர்வதேசத்துக்கு விடுக்கிறேன்.  

அதாவது உலகளவில் வெப்பம் அதிகரிப்பினை தடுப்பதற்காக பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் 2015 ம் ஆண்டு - இந்நூற்றாண்டின் முடிவில் வெப்பநிலை அதிகரிப்பை 02டிக்கிரி செல்சியஸ்ஸால் குறைத்தல்; அல்லாது போனால் 1.5 டிக்கிரி செல்சியஸினாலாவது இந்த வெப்பநிலையைக் குறைக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. 

இல் ஒப்பந்தத்தில் 12 . டிசம்பர். 2015 இல் 55 நாடுகள் கையொப்பம் இட்டுள்ளன. பாரிஸ் உடன்படிக்கை 2016 - நவம்பர் -4ம் திகதி அமுலுக்கு வந்தது. இலங்கை நாடானது 2016 - ஏப்ரல்- 22 ம் திகதியே கைச்சாத்திட்டு விட்டது. 
இச் சபை மூலமாக பகிரங்க அரைகூவல் ஒன்றினை விடுகிறேன். 

2015 பாரிஸ் ஒப்பந்தத்தில் இன்று வரையும் கையெழுத்திடாத உலக நாடுகளின் தலைவர்களே! இவ் ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டு இணைந்து கொள்ளுங்கள்  என அழைப்பு விடுகிறேன்.' - என்றார்.

காடழிப்புகள் மற்றும் மரங்களின் இன்றியமையா தன்மைய அவற்றின் தாக்கங்கள் குறித்த இந்த உரையில் 2015 பாரிஸ் உடன்படிக்கையில் இதுவரையும் கைடியழுத்திடாத  உலக நாடுகளின் தலைவர்களை விழித்து அழைப்பு விடுத்தமை சிறப்பம்சமாகும்.

✍️ கியாஸ் ஏ. புஹாரி

நன்றி - 'புதுச்சுடர்'

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.