#தியாகத்தென்றல்: முகநூல் தொலைக்காட்சிகளின் முதல்வன் வியூகம் TV ஏற்பாட்டில் தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நாபீர் பவுண்டேஷன் அனுசரணையில் 

"தியாகத் தென்றல்" இஸ்லாமிய கலை கலாசார சிறுவர் குதூகல பல்சுவை நிகழ்ச்சி வியூகம் ஊடக வலையமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ஜனூஸ் சம்சுதீன் தலைமையில் கடந்த 30.06.2023 வெள்ளிக்கிழமையன்று   சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள மருதூர் சதுக்கத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபக தலைவர், பிரபல சமூக சேவையாளர், பொறியியலாளர் கலாநிதி. நாபீர் உதுமான்கண்டு கலந்து சிறப்பித்தார். விசேட அதிதியாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பிறை எப்.எம்.பிரதி பணிப்பாளர் பஷீர் அப்துல் கையூம் உள்ளிட்ட மற்றும் பலர் பங்கேற்றனர்.

கிழக்கு மாகாண வரலாற்றில் பல்லாயிரக் கணக்கான மக்கள் பல்வேறு பிரதேசங்களில்  இருந்து குடும்பமாய் திரண்டு வந்து இஸ்லாமிய கலை கலாசார பாரம்பரிய சிறுவர் பல்சுவை நிகழ்ச்சிகளை கவலைகள் மறந்து ரசித்த உன்னத தருணங்களாக வியூகம் TV  ஏற்பாடு செய்திருந்த தியாகத் தென்றல் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

"குரலற்ற மக்களின் குரல்" எனும் மகுடத்தில் எட்டாண்டுகள் கடந்து பல்லாயிரம் மக்கள்  மனங்களில் வெற்றி நடை போடும் முக நூல் தொலைக்காட்சிகளின் முதல்வன் வியூகம் Tv தென் கிழக்கில் மருவி வரும்
நம்மவர் கலை கலாசார பாரம்பரிய அம்சங்களான களிகம்பு (பொல்லடி) ரபான், பக்கீர் பைத், கஸீதா, நாட்டார் கவிதைகள் மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அத்துடன் இசை முரசு மர்ஹும் நாகூர் ஈ.எம்.ஹனீபா புகழ் மருதமுனை கமால் வழங்கிய இஸ்லாமிய கீதங்கள் நிகழ்வுக்கு மென்மேலும் மெருகினை கூட்டியது சிறப்பம்சமாகும்.

மேலும், மறைந்த மூத்த ஒலி ஒளிபரப்பாளர் மர்ஹும் ஏ. ஆர்.எம்.ஜிப்ரி மற்றும் மூத்த கலை இலக்கியவாதி மர்ஹும் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் ஆகிய ஆளுமைகளின் நினைவாக துறை சார்ந்த விற்பன்னர்களுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இதில்
மூத்த ஒலி ஒளிபரப்பாளர் மர்ஹும் 
ஏ. ஆர்.எம்.ஜிப்ரி ஞாபகார்த்த விருது பெற்றோர்:

1)அல்ஹாஜ். பஷீர் அப்துல் கையூம்
பிறை எப்.எம். பணிப்பாளர்
2)இதய ராகம் புகழ் எஸ். ரீ.ரவூப்
உதவி முகாமையாளர் Capital fm
3)ஏ. எல்.நயீம்
அறிவிப்பாளர்-இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்
4)ரோஷன் அஷ்ரப்
அறிவிப்பாளர்-இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்
5)ஏ. பீம்.எம்.நிஸ்ரின்
செய்தி வாசிப்பாளர்-இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
6)ஜே.எம்.பாஷித்
ஸ்கை தமிழ் மீடியா-பணிப்பாளர்மூத்த கலை இலக்கியவாதி மர்ஹும் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் ஞாபகார்த்த விருதினை பெற்றுக்கொண்டோர் விபரங்கள்:

1)சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்றம்
2)சாய்ந்தமருது தக்வா கோலாட்ட குழு
3)நாகூர் ஈ.எம்.ஹனீபா புகழ் மருதமுனை எஸ். எம்.கமால்தீன்
4)பல்துறை கலைஞர் கே.எல்.நஜாத்
5)சிறந்த தொழில் நுட்ப கலைஞர் கே.எம்.எம்.அசாம் ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

முகநூல் தொலைக்காட்சிகளின் முதல்வன் வியூகம் Tv ஏற்பாட்டில் நாபீர் பவுண்டேஷன் அனுசரணையில் இடம்பெற்ற தியாகத் தென்றல் நிகழ்வில் சிறுவர்களின் மேடை கூச்சத்தினை போக்கி, அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்ததுடன் காத்திரமான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஓட்டுமொத்தத்தில் மருதூரில் பல தசாப்தங்கள் தாண்டி இடம்பெற்ற இந்நிகழ்வானது இன்னும் பல தசாப்தங்கள் கடந்தும் பேசப்படும் என்பது திண்ணம்...

ஜே.எம்.பாஸித் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.