விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு
மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு
மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டதுடன், அதன் உறுப்பினர்களாக உயர் நீதிமன்ற நீதியரசர் M.H.M.D. நவாஸ், ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்த்ரா பெர்னாண்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
ஆணைக்குழுவின் ஆணையாளராக யோகேஷ்வரி பற்குணராஜா பின்னர் நியமிக்கப்பட்டார்.
கருத்துகள்
கருத்துரையிடுக