நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி :  இருவரின் தலைகளும் ஒன்றுடன் ஒன்று மோதி நீரில் மூழ்கியுள்ளனர்

ஸ்ரீபுர, திஸ்ஸபுர பகுதியில் கால்வாய் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்கள் 12 மற்றும் 15 வயதுடைய திஸ்ஸபுர மற்றும் ஸ்ரீபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

இரண்டு சிறுவர்களும் கால்வாய்க்கு அருகே உள்ள மரத்தில் ஏறி கால்வாயில் குதித்த போது, ​​இருவரின் தலைகளும் ஒன்றுடன் ஒன்று மோதி நீரில் மூழ்கியுள்ளனர். 

நீரில் மூழ்கிய இரு குழந்தைகளும் ஸ்ரீபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஸ்ரீபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.