மேலும் பல வரிகள் விரைவில் அறிமுகம்

 அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மேலும் பல வரிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 செல்வ வரி, காணி வரி மற்றும் தோட்டவரி ஆகியவை முதலில் அறிமுகப்படுத்தப்படும் உத்தேச வரிகள் என்று கூறப்படுகிறன.

 இதேவேளை, இதுவரை VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு VAT விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியம்
செலவினங்களைக் குறைப்பதற்கும், வருவாய் அதிகரிப்பை உருவாக்குவதற்கும் சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு வழங்கிய அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இந்த வரிகள் விதிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஏற்கனவே பல வரிகள் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல வரிகள் நடைமுறைக்கு வரவுள்ளமை மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.