நுவரெலியாவில் மழையால் கல் சுவர் இடிந்து விழுந்து இரண்டு அறைகள் சேதம் 

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரூவான் எளிய பிரதேசத்தில் தொடர்ச்சியான மழையினால் வீட்டின் 15 அடி உயரம் கொண்ட  பாதுகாப்பு கல் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இரண்டு அறைகள் மற்றும் மலசலகூடம் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ள நிலையில் அங்கு வீட்டின் குடியிருப்பாளர்கள் இருந்தபோதும் அவர்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் வீடுகளில் உள்ள பொருட்கள் சேதமடைந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலைநாட்டிலும் தொடர்ந்து  மழையுடனான காலநிலை நிலவி வருகிறது , இதேவேளை தொடர்ச்சியான மழைக் காரணமாக பல இடங்களில் மண் சரிவு மற்றும் கற்கள் புரளும் அபாயமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வி.தீபன்ராஜ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.