எரிபொருள் கையிருப்பு தொடர்பில் விசேட அறிவிப்பு

அரசாங்கத்திடம் தற்போது போதியளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று (23) காலை 8.30 மணி நிலவரப்படி அரசாங்கத்திடம் 133,936 மெட்ரிக் தொன் டீசல் உள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதேநேரம் 6,192 தொன் சூப்பர் டீசலும் உள்ளது.

அத்துடன் 35,402 மெட்ரிக் தொன்  92 ரக ஒக்டேன் பெற்றோல் மற்றும் 5,367 மெட்ரிக் தொன் 95 ரக ஒக்டேன் பெற்றோலும் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று காலை நிலவரப்படி அரசிடம் 30,173 மெட்ரிக் தொன் விமான எரிபொருள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக அரசாங்கத்தின் எரிபொருள் கையிருப்பு சற்று குறைவாக காணப்பட்ட போதிலும், அது தற்போது மீளமைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.