கல்முனையில் சமுர்த்தி சிறுவர் கழக கலாசார மற்றும் இலக்கிய போட்டிகள்..!


கல்முனை பிரதேச செயலக பிரிவின் சமுர்த்தி சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்,சமுர்த்தி கெக்குலு சிறுவர் கழக கலாசார மற்றும் இலக்கிய போட்டிகள்,சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் முகாமைத்துவப்பணிப்பாளர் என்.எம்.நௌஸாத்
தலைமையில் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்(28) நடைபெற்றது.

இதில் பிரதேச மட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி,கௌரவ அதிதியாக தலைமைபீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,சிறப்பு அதியாக சமுர்த்தி முகாமையாளர் எம்.ஏ.எம்.பைசால் மற்றும் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.கே. காமிலா,வலய உதவி முகாமையாளர்களான பீ.எம்.இஸ்ஹாக், ஐ.எல்.அர்சுத்தீன்,யூ.எல்.தௌபீக் உத்தியோகத்தர்களான ஈ.சுசசந்த,ஏ.எம்.நூறுல் அஸ்மா,பிரதேச அமைப்பின் செயலாளர்,பொருளாளர் என பலரும் கலந்து கொண்டனர்.

( கல்முனை நிருபர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.