உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்திய ஒடிசா ரயில் விபத்து! காரணத்தை வெளியிட்டது ரயில்வே பாதுகாப்பு ஆணையம்.
ஒடிசா ரயில் விபத்திற்கு தவறான சிக்னலே காரணம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் விளக்கமளித்துள்ளது.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த மாதம் 2-ந் திகதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் 291 பேர் உயிரிழந்ததுடன், 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் சதி வேலையா அல்லது மனித தவறா என விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில், தவறான சிக்னலே ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.