இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
இன்று(13) முதல் 3 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
நாடளாவிய ரீதியில் இன்று(13) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று(13), நாளை(14) மற்றும் நாளை மறுதினம்(15) ஆகிய 3 தினங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.
இதற்காக பொலிஸார் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 52021 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கருத்துரையிடுக