கிழக்கு மாகாண ஆளுநர் கள நிலவரத்தைப் புரிந்து கொண்டு செயற்பட நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இனவாதிகளின் கைப்பொம்iயாக மாறாமல் கள நிலவரத்தைப் புரிந்து கொண்டு செயற்பட நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
களநிலவரத்தை அறிந்து கொள்ளாமல் கிழக்கு மகாண ஆளுநர் சில பாரபட்சமானதும் அந்தஸ்துக்குத் தகுதியற்றதுமான சில நடவடிக்கைகளை கிழக்கு மாகாண ஆளுநர் சமீப சில நாட்களாக மேற்கொண்டு வந்திருந்தது விமர்சனத்திற்குள்ளாகியிருந்தது. 
கிழக்கு மாகாண ஆளுநரின் சில நடவடிக்கைகள் பற்றி மக்களிடம் நிலவிய அதிருப்தியான கருத்துக்கள் தொடர்பாக  கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபித்திருந்தார்.அத்துடன் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்களும் பொது அமைப்புக்களும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயத்தில் அக்கறை கொள்ளத்துவங்கினர்.
அதன் பயனாக இப்பொழுது கிழக்கு மாகாண ஆளுநர் விழிப்படைந்து தனது போக்கை மாற்றி கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக முஸ்லிம் ஒருவரை நியமித்தது வரவேற்கத்தக்கது என்று அவதானிப்பாளர்கள் கருதுகின்றனர். 

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் வாழ்கின்றார்கள். இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அமைதிக்குப் பங்கம் விளைவிக்காத வகையில் ஆளுநர் நடவடிக்கை மேற்கொள்ளத் தலைப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இவ்வாறான முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பு எங்கு ஏற்பட்டாலும் அமைச்சர் நசீர் அஹமட் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டுமென முஸ்லிம் சமூக அமைப்புக்கள் கோருகின்றன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.