ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கான காரணம் வௌியானதுகடந்த சில நாட்களாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை தற்காலிகமான நிலையே என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர், கேள்வி மற்றும் நிரம்பலின் அடிப்படையில் அதன் மதிப்பை நிர்ணயிக்க இடம் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

இதன் காரணமாகவே டொலரின் பெறுமதி சற்று அதிகரித்ததாகவும் இது தற்காலிக நிலையே என நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கடந்த சில நாட்களாக ரூபாவின் பெறுமதி கு​றைவடைந்து வருவதால்  தேசிய தொழில் முயற்சியாளர்களின் வர்த்தகங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய வர்த்தகர் சுதந்திர சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி கூறுகிறார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.