ஓட்டமாவடி பிரதேச செயலக புதிய கட்டிடம் அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களினால் கோலாகலமாக திறந்து வைப்பு.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக புதிய கட்டிட தொகுதியை கௌரவ சுற்றாடல் அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான Z.A.நசீர் அகமட் எம்பி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு 25.07.2023 திகதி நேற்று மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக முன்னால் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் வெ.தவராஜா, ஏறாவூர் பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் மற்றும் உதவி பிரதேச செயலாளர் எம்.அல் அமீன், சுற்றாடல் அமைச்சரின் இணைப்பு செயலாளர் ஏ.ஏ.நாஸர், கல்குடா இணைப்பாளர் எம்.ஜவாத் மற்றும் உள்ளூர் திணைக்கள தலைவர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது காகித நகர் பகுதியில் நீண்ட காலமாக காணிகளை பராமரித்து வந்தவர்களுக்கான காணி உறுதிப் பத்திரங்களை அமைச்சர் நசீர் அகமட் அவர்களினால் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக