கடன் குறித்து பேசிய ஜப்பான் அமைச்சர்!

எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஆதரவளிக்க ஜப்பான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக இலங்கை வந்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யொஷிமாசா தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறுகையில், அனைத்து கடன் வழங்கும் நாடுகளையும் உள்ளடக்கிய வெளிப்படையான மற்றும் ஒப்பிடக்கூடிய கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.