கஹட்டோவிட்ட RC Welfare Association இன் 10 வருட நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட RC Premier League - 2023 கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் கஹட்டோவிட்ட பொது மைதானத்தில் கடந்த 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

35 வயதுக்கு கீழ் மற்றும் 35 வயதுக்கு மேல் என்று இரு பிரிவுகளாக இடம்பெற்ற குறித்த கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளில் 35 வயதின் கீழ் சம்பியன் கிண்ணத்தை RC Warriors அணி சுவீகரித்ததுடன், 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவு சம்பியன் கிண்ணத்தை RC Master அணி சுவீகரித்துக்கொண்டது.

கஹட்டோவிட்ட RC Welfare Association மூலம் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை விசேட அம்சமாகும். 

அதன் ஓர் அங்கமாக சென்ற மாதம் கஹட்டோவிட்ட பிரதேசத்தில் கண் பரிசோதனை முகாம் ஒன்று நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.