X-Press Pearl வழக்கை சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றுக்கு மாற்ற கப்பல் நிறுவனம் இணக்கம்

 X-Press Pearl கப்பல் நஷ்டஈட்டு வழக்கை சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்திற்கு மாற்ற கப்பல் நிறுவனம் இணங்கியுள்ளது.

நிபந்தனைகள் இன்றி, ஒப்பந்த அடிப்படையில் இதனை மேற்கொள்ள இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நஷ்டஈடு கோரி இலங்கை அரசாங்கம் தாக்கல் செய்துள்ள வழக்கின் ஆவணங்களை, கப்பல் நிறுவனம் சார்பான சட்டத்தரணிகளுக்கு பெற்றுக்கொடுக்குமாறு சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று(08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 14 ஆம் திகதி குறித்த ஆவணங்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, X-Press Pearl கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடன்படிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை அனுமதியுடன் நியமிக்கப்பட்ட விசேட குழுவினர் எதிர்வரும் 17ஆம் திகதி சிங்கப்பூர் செல்லவுள்ளனர்.

குறித்த குழு 2 நாட்கள் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.