ஊடக வெளியீடு 
இலங்கையின் முதல் தர பாடசாலைகளின் வரிசையில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இவ்வாண்டு தனது 105 வது வருட விழாவை மிகக் கோலாகலமாக கொண்டாடவுள்ளது.

  அந்த வரிசையில், அதன் முதல் கட்டமாக பழைய மாணவர்களுக்கிடையியேயான ஒரு மாபெரும் கிரிக்கட் சுற்றுப் போட்டியை கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2  ஆம் 3  ஆம் திகதிகளில் வெட்டுமக்கட பாகிஸ்தான் மைதானத்தில் நடாத்தவுள்ளது. 

1986 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கல்லூரியில் கற்று வெளியான சாதாரண தர மாணவக் குழுக்களை அடிப்படையாக வைத்தே குறித்த போட்டிகள் நடைபெறவுள்ளன. முழு ஊரினதும் ஆதரவோடு, மிக விமர்சையாக  நடைபெறவுள்ள குறித்த நிகழ்வின், ஆரம்ப வைபவத்தில் கல்லூரியின் பழைய மாணவரும் இலங்கையின் வெளி விவகார அமைச்சருமான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் உவைஸ் மொஹம்மட், இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் முன்னாள் பிரபல வேகப் பந்து வீச்சாளர்களான சமிந்த வாஸ், ரவீந்திர புஷ்பகுமார ஆகியோர்  கலந்து கொள்ளவுள்ளனர். 

குறித்த நிகழ்வின் நிறைவு விழாவில்  இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் சர்வதேச  கிரிக்கட் ஜாம்பவானுமான சனத் ஜயசூரிய கலந்து கொள்ளவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.

தகவல்
ஹிஷாம் ஸுஹைல்
நிறைவேற்றுக் குழு உருப்பினர்
பழைய மாணவர் 
களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.