இலங்கையில் மாரடைப்பினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு தினமும் சுமார் 170 பேர் பாதிப்பு..!

இலங்கையில் மாரடைப்பினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு தினமும் சுமார் 170 பேர் பாதிப்பு..!

இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 170 பேர் மாரடைப்பினால் பாதிக்கப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் விசேட நிபுணர் வைத்தியர் கோட்டபாய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் கடந்த 10 வருட காலமாக மாரடைப்பினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 

இது தற்போது உட்கொள்ளும் உணவு முறைமை காரணமாகவே ஏற்படுகின்றது.

சீனி மற்றும் எண்ணெய் அளவு உணவில் அதிகரிப்பதனாலும் இந்த நிலைமை ஏற்படுகின்றது. 

சிலர் மூன்று வேளையும் சோறு உட்கொள்கின்றனர். இதுவும் பாரிய சிக்கலை ஏற்படுத்துகின்றது.

எனவே மக்கள் தாம் உட்கொள்ளும் உணவு குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள்