நாட்டில் 200க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு இன்னும் தட்டுப்பாடு நிலவுகிறது

சுகாதாரத் துறையில் தொடர்ச்சியான சவால்கள் இருந்த போதிலும், இலங்கை தொடர்ந்து 216 மருந்துகளின் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளரான வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 பற்றாக்குறை சற்று முன்னேற்றமடைந்துள்ள போதிலும், எஞ்சியுள்ள இடைவெளியை நிவர்த்தி செய்து, எதிர்வரும் மாதங்களில் பற்றாக்குறையை 100க்கும் கீழ் குறைப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

 14 உயிர்காக்கும் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் ,தற்போது பயன்பாட்டில் உள்ள சுமார் 1,300 மருந்துகளில், 383 அத்தியாவசியமானதாகக் கருதப்படுகிறது.

“இருப்பினும், தற்போதைய 216 மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது., மேலும் அவற்றை விரைவில் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார் .

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.